மகளிர் வாழ்வாதத்திற்காக உலர், ஈர மாவு அரைக்கும் இயந்திர வாங்கும் மானிய தொகைக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சமூகத்தில் பின்தங்கிய கைம் பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் என அனைவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 – 26 நிதியாண்டிற்கான வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ. 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்களை வாங்கும் போது மொத்த விலையில் 50 % மானியம் வழங்கப்பட உள்ளது.
- இத்திட்டத்தில் பயன்பெற விரும்பு மகளிர் தமிழ்நாட்டை பூர்வீகமாக வசிப்பதாக இருக்க வேண்டும்.
- 25 வயதுக்கு மேல் பட்டவராக இருத்தல் வேண்டும்
- பிறப்புச் சான்று
- கைம் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று
- ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
இத்திட்டத்தில் சேர விரும்புவோர் சென்னை மாவட்ட ஆட்சியரங்கம், சிங்காரவேலனார் மாளிகை 8 ஆவது தளத்தில் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதர விவரங்களை அறிய மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.
