கும்பாபிஷேக விழாவில் சாலையோரம் காலைக்கடன் கழிக்க சென்ற 5 வயது சிறுமி… நொடி பொழுதில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஆவணி 30, 2025

Spread the love

திருச்சியில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வந்த ஐந்து வயது குழந்தை விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள மாமரத்து பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ பட்டாயி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள ஏராளமான ஊர்களில் இருந்து பக்தர்கள் அனைவரும் வருகை தந்தனர்.

இந்நிலையில் பைரவி என்று ஐந்து வயது சிறுமியும் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த விழாவுக்கு வந்திருந்தார். கும்பாபிஷேக விழாவிற்கு வந்த குழந்தை காலை கடன் கடிப்பதற்காக சாலையோரம் உள்ள முட்புதரில் அமர்ந்துள்ளது. அப்போது தொட்டியத்தில் உள்ள புதிய மரியன்னை பள்ளியை சேர்ந்த வேன் ஒன்று குழந்தை மீது மோதியதில் குழந்தையின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.