திடீர் திருப்பம்..! திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்..? ஒரே போடு போட்ட ஸ்டாலின்..!!

By Soundarya on ஆவணி 30, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய கூட்டணியை பலமாக வைத்துக்கொண்டு மீண்டும் திமுக ஆட்சியை நிலைநிறுத்த தீவிரமாக  செயல்பட்டு வருகிறார். மறுபக்கம் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளார். இதற்கிடையில் கட்சி தாவலும் நடந்து வருகிறது.

அந்தவகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாக  அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, புதிய கட்சிகள் திமுக பக்கம் வருகிறதோ இல்லையோ, ஆனால் புதிய வாக்காளர்கள் வருகின்றனர். கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் அவற்றையெல்லாம் மிஞ்சி திமுக வெற்றிபெறும்” என்று தெரிவித்துள்ளார்.