உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… பட்டதாரிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கும் தமிழக அரசு… உடனே அப்ளை பண்ணுங்க…!

By Srimathi on ஆவணி 30, 2025

Spread the love

வேளாண்மை ஒரு நாட்டின் முதுகெலும்பாக விளங்குவதோடு, கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேட்ப நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி, உணவு உற்பத்தி செய்வதற்கு வேளாண் சார்ந்த கல்வி மிகவும் உறுதுணையாக உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தோடு, 1000 உழவர் நல சேவை மையங்கள் உருவாக்கிட அறிவிப்பு வெளியானது. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை வங்கி கடன் பெற்று, அதில் 30 % மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவை மையங்கள் மூலம், உரம், விதை, விவசாயம் சார்ந்த பொருட்கள் நவீன தொழில்நுட்பங்கள் போன்ற அனைத்து விவசாய தேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

பயன் பெற  தகுதிகள்

   
  • வயது வரம்பு – 20 முதல் 45 வரை
  • கல்வித் தகுதி – வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண்பொறியியல் பட்டப்படிப்பு /பட்டயப்படிப்பு
  • அரசு & அரசுசார் நிறுவனத்தில் பணியில் இருத்தல் கூடாது
  • வங்கி மூலம் கடன் பெற்ற, தொழில் புரிவோர் நிறுவனத்தின் உரிமையானது, தனியுரிமையாக இருத்தல்  வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அடிப்படைக் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும்
  •  ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே நிதி உதவி பெற முடியும்

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

   
  • 10 & 12 ஆம் வகுப்பு சான்றிதழ்
  • பட்டப் படிப்பு  / பட்டயப்படிப்பு சான்றிதழ்
  • ஆதார் அட்டை
  • ரேஷன் கார்டு
  • சரக்கு & சேவை வரி எண்(GST No)
  • PAN card
  • Community Certificate
  •  வங்கி கணக்கு புத்தகம்
  • வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம்
  • விரிவான திட்ட அறிக்கை

திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், விதை விற்பனை உரிமம், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயனாளிகள் உரிமம் இல்லாமல் இருந்தால், வேளாண்மை துறையை அணுகி உரிமம் பெறலாம். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர், 10 லட்சம் அல்லது 20 லட்சம் மதிப்பிலான திட்ட அறிக்கையை வங்கிகளில் சமர்ப்பித்து கடனுதவி பெற வேண்டும், கடன் உதவி வழங்கிய உத்தரவு கடிதத்தினை சமர்ப்பித்த பிறகு விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். மேலும் www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதளம் மூலமும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் இத்துடன் உழவர் பயிற்சி நிலையம் அல்லது வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பயிற்சியும் அளிக்கப்படும்.

 

சேவை மையம் அமைப்பதற்கான இடம்

  • சொந்த சொந்த இடம் / வாடகை / குத்தகை ஒப்பந்தம்
  • சொந்த இடமாக இருப்பின், சொத்து வரி ரசீது / மின்சார கட்டண ரசீது / குடிநீர் வரி ரசீது அவசியம்.
  • வாடகை இடமாக இருப்பின், உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் வேண்டும்.
  • ரூ. 10 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் தொடங்க உழவர் நல சேவை மையம் 300 சதுர அடி  பரப்பில் இடுப்பொருள் இருப்பு வைக்கும் வகையில் இடம்  இருக்க வேண்டும்
  • ரூ. 20 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் தொடங்க உழவர் நல சேவை மையம் 600 சதுர அடி பரப்பில் இடுப்பொருள் இருப்பு வைக்கும் வகையில் இடம்  இருக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு 9840706334 / 9994895893 & மின்னஞ்சல் முகவரி: ddabthirupattur2023@gmail.com தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம்.