தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற “சின்னப் பாப்பா பெரிய பாப்பா” சீரியல் இயக்குநர் S.N.சக்திவேல் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். இவர், 2015-ல் MS பாஸ்கர், தீபக், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோரை வைத்து “இவனுக்கு தண்ணில கண்டம்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இவர் கடைசியாக DD Tamil-ல் “பட்ஜெட் குடும்பம்” என்ற தொடரையும் இயக்கியிருந்தார். இந்நிலையில் இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
