2008 ஐபிஎல் தொடரில் நடந்தது என்ன?… ஹர்பஜன் சிங் – ஸ்ரீசந்த் இடையே நடந்த மோதல்.. 17 வருடம் கழித்து வெளியான வீடியோ…!

By Divyamayakannan on ஆவணி 29, 2025

Spread the love

ஐபிஎல் டி20 லீக் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு, மும்பை இந்தியன்ஸ்-பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி முடிந்த நிலையில் . ஹர்பஜன் சிங் – ஸ்ரீசந்த் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. கோபத்தில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்துள்ளார். சீனியராக இருந்து கொண்டு இது போன்று கடுமையாக நடந்து கொள்ளலாமா என்று அந்தச்  சமயத்தில் பெரிய அளவில் ஹர்பஜன் சிங் விமர்சிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வீடியோ எதுவும் வெளியாகவில்லை. பல வருடங்கள் கழித்து தற்போது லலித் மோடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் நடந்தபோது லலித் மோடி ஐபிஎல் மேட்சில் தலைவராக இருந்துள்ளார். பண மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது வழக்கு உள்ளது. ஆகவே, இந்தியாவில் இருந்து தப்பித்தோடி தற்போது  வெளிநாட்டில் வசித்து வருகிறார்.