யாரு பெருசுனு பாத்திரலாமா.. காங்கிரஸ் – பாஜக இடையே கடுமையான மோதல்… பரபரப்பை கிளப்பும் வீடியோ…!

By Divyamayakannan on ஆவணி 29, 2025

Spread the love

பீகாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது தேர்தல் கமிஷன். 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி உள்ளனர். பீகாரில் மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் யாத்திரை நடத்தி வருகின்றனர். கடந்த 16ஆம் தேதி முதல் யாத்திரை நடந்து வருகிறது. வருகின்ற ஒன்றாம் தேதி நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரையில் பலத்  தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசி உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதனால் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது இரு தரப்பினரும் மாறி மாறித்  தாக்கிக் கொண்டனர். அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தை நடத்திக்  கலைந்து போக வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.