அழகியுடன் உல்லாசமாக இருந்த பாஜக நிர்வாகி… வீடியோ எடுத்து வெளியிட்ட விஜய் கட்சி பிரமுகர்… இறுதியில் நடந்த பயங்கர ட்விஸ்ட்…!

By Nanthini on ஆவணி 29, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி அரை நிர்வாணமாக்கப்பட்ட தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சூரியகுமார் என்பவர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் நிர்வாகியாக இருந்து வருகின்றார். இவரும் பாஜக கட்சியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் பாஜக நிர்வாகி விக்னேஸ்வரன் அழகியுடன் உல்லாசமாக இருப்பதை தன்னுடைய செல்போனில் சூரியகுமார் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

தான் பதிவு செய்த வீடியோவை விக்னேஸ்வரனின் மனைவிக்கு செல்போன் மூலமாகவும் சூரியகுமார் அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவியிடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் விக்னேஸ்வரனின் மனைவி அவரைப் பிரிந்து சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் விக்னேஸ்வரன் தன்னுடைய நண்பனான சூரியகுமார் மீது கோபத்தில் இருந்து உள்ளார். தன் மனைவி பிரிந்ததற்கு அவன்தான் காரணம் என நினைத்து சூரிய குமாரை தண்டிக்க முடிவு செய்த விக்னேஸ்வரன் மது அருந்தலாம் என்று கூறி பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

   

அங்கு சூரிய குமாரை அரை நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கியுள்ளார். அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த தாக்குதலின் போது தன்னை விட்டு விடுமாறு சூரியகுமார் கெஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது சூரியகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விக்னேஸ்வரனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.