பிரபல நடிகரான ரவி மோகன் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் என்ற படத்தை இயக்குனர் கார்த்திக் யோகி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் எஸ். ஜே சூர்யா, அர்ஜுன் அசோகன், கௌரி பிரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோவில் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற பாடல் உபயோகப்படுத்தப்பட்டது. புரோமோவை பார்க்கும் போது என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்று ஜாலியாக கூறும் கணவர்களின் மனநிலையை பிரதிபலிப்பது போல் உள்ளது.
இப்போது வரும் படங்களில் பழைய பாடல்களை பயன்படுத்தும் போது முறையாக அனுமதி வாங்க வேண்டும். சிலர் அனுமதி வாங்காமல் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்குகின்றனர். கடைசியாக வனிதா விஜயகுமார் நடிப்பில் ரிலீசான மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்திலும் இளையராஜாவின் பாடலை அனுமதி வாங்காமல் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் யோகி மற்றும் பட குழுவினர் இசைஞானி இளையராஜாவை சந்தித்து கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் சோசியல் மீடியாவில் பதிவிட்டு கல்யாண மாலை பாடலை பயன்படுத்த அனுமதி வழங்கியதற்கு நன்றி கூறியுள்ளார்.
முன்னதாக கங்கை அமரன் இசைஞானி தனது பாடலை பயன்படுத்துவதற்கு பணம் கேட்பதில்லை. அனுமதி வாங்கிவிட்டு பயன்படுத்த வேண்டும் என விரும்புவதாக கங்கை அமரன் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
Thanks a lot Raja sir 🙏🏻for giving us the masterpiece ‘kalyana maalai’ which is the spine of this promo@RaviMohanStudio #Brocode pic.twitter.com/LcsoPvydX8
— Karthik Yogi (@karthikyogidir) August 28, 2025
