தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் தான் நடிகர் விஷால். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்த 12 வருடங்களுக்கு முன்பு ரிலீசாக வேண்டிய மதவச்ச ராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. 50 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் கடந்த நிலையில் அடுத்து விஷால் படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே சமயம் விஷால் மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் காக வந்திருந்த சமயத்தில் மைக்கு பிடித்த அவர் கைகள் நடுங்கிய வீடியோக்கள் வெளியான நிலையில் விஷாலுக்கு உடல்நிலை கோளாறு என ஏராளமான வதந்திகள் பரவியது.
இதுஒருபுறம் இருக்க சாய் தன்ஷிகாவை தான் காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்வதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற உள்ளது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்த விஷால், தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் திருமண பந்தத்தில் நுழைய இருக்கிறார். சென்னையில் உள்ள விஷாலின் வீட்டில் இரு வீட்டார், நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
