தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிர வேலைகளில் இறங்கி உள்ளார்கள். ஆட்சியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவில் திமுகவும், விட்ட ஆட்சி எப்படியாவது மீண்டும் பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜயும் அரசியல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் மதுரையில் இரண்டாவது மாநாட்டை நடத்தி முடித்தார். விஜய் கட்சி தொடங்கியது முதலே, தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்தவகையில் 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று TTV தினகரனும் கூறியிருந்தார். இந்நிலையில், அதே கருத்தை பிரேமலதாவும் முன்னிறுத்தியுள்ளார். 2006-ல் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் மீண்டும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தேமுதிகவுடன் உடன் தவெக கைகோர்க்க இருப்பதாக பேசப்படும் நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.
