குழந்தைகளின் ஆதார் கார்டுகளை அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே அப்டேட் செய்து கொள்ளும் வகையில் முகாம்கள் அமைத்து வருகின்றது. பயோமெட்ரிக் அப்டேட்டை 5 முதல் 15 வயது உள்ள இருக்கும் குழந்தைகளுக்கு கட்டாயம் செய்ய வேண்டும். கல்வி மற்றும் எழுத்தறிவு துறையுடன் இணைந்து, இது போன்ற அப்டேட்டை செய்வதால் பலகோடி மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. NEET, JEE, CUET இது போன்ற போட்டி தேர்வுகளுக்கு ஆதார் கார்டு அப்டேட் செய்ய வில்லை என்றால் பதிவு செய்ய முடியாது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து UDISE + செயலி மூலம் தீர்வு ஒன்று உருவாகி உள்ளது. குழந்தைகளின் ஆதார் கார்டில் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சுமார் 17 கோடி ஆதார் எண்களில் பயோமெட்ரிக் அப்டேட் நிலுவையில் உள்ளது. உங்கள் குழந்தையின் ஆதார் கார்டுயை பள்ளிகளை அணுகி பயோமெட்ரிக் அப்டேட்டை செய்து கொள்ளுங்கள்.
