தற்கொலைக்கு முயன்ற தம்பதி… கணவர் இறந்த செய்தி கேட்டதும்… அடுத்தடுத்து மரணத்தால் பெரும் அதிர்ச்சி…!!

By Srimathi on ஆவணி 28, 2025

Spread the love

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிதுரை (83), மனைவி முத்துலட்சுமி (74). இவர்களுக்கு இரு மகள்களும், ஆனந்த் (52) என்ற மகனும் உள்ளனர். ஆனந்த் புதுச்சேரியில் வசித்து வருகிறார். இவருக்கு, கலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். ஆனந்த் மடுகரையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். மாரிமுத்துவின் மகள் கும்பகோணத்தில் வசித்து வருகிறார்.

மாரிமுத்து முத்துலட்சுமி இருவரும், மகன் & மகள்கள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களாக ஆனந்தின் பராமரிப்பில் தாய் தந்தை வசித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டு, வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு வேலைக்குச் சென்றார், ஆனந்த். அவர்கள் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.

   

அப்பொழுது அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு முத்துலட்சுமி உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பி நிலையில், மாரிமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று காலை 4:25 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தியை கேட்ட முத்துலட்சுமி, காலை 6:10 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.