இதை மட்டும் இந்தியா செய்தால் நாளையே 25% வரி ரத்து… வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் சொன்ன விஷயம்..!!

By Soundarya on ஆவணி 28, 2025

Spread the love

உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியா தொடங்கிய போர் இன்றுவரை முடிவுக்கு வராமல் இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. ரஷிய அதிபர் புதினுடன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் பொருளாதாரத்தில் மேலே உள்ளது என்று அமெரிக்கா கூறிவருகிறது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அரசு மீது வரிகளை விதித்து வருகிறது அமெரிக்கா.

இதனால் இந்தியாவில் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற உள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான 25% வரி  குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள்  தங்களுடைய வருமானம், வேலைகளை இழப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனாவை வர்த்தக கூட்டாளியாக பார்ப்பதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.