தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்ற நிலைப்பாடோடு செயல்பட்டு வருகிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதே சமயம் மேடையில் பேசும்போதெல்லாம் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என தொடர்ந்து கூறி வருகின்றார். இதனிடையே அதிமுக மற்றும் பாஜக இடையே ஒரு முரண்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு TVK வரவேண்டும் என ஆர்பி உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த நினைத்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என தெரிவித்தார். திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி அதிமுகவிற்கு தான் உள்ளது என டெல்லியில் உள்ள பாஜகவிற்கு தெரியும்போது, விஜய்க்கு ஏன் தெரியவில்லை என கூறினார். முதல்வராக வேண்டும் என்பதற்காக TVK தொண்டர்களின் உழைப்பு மற்றும் எதிர்பார்ப்பை விஜய் வீணடித்திட வேண்டாம் என அறிவுரை வழங்கினார்
