காமெடியன் டூ நடிகராக கலக்கி கொண்டிருக்கும்… நடிகர் சூரியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..???

By Divyamayakannan on ஆவணி 27, 2025

Spread the love

நகைச்சுவை நடிகராக சினிமாவில் பயணத்தை ஆரம்பித்தவர் இன்று பலத்தடைகளைத் தாண்டி மாஸ் ஹீரோவாக உருவெடுத்துநிற்கிறார். விடுதலை, கருடன், கொட்டுக்காலி என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மாமன் திரைப்படத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரின் நெஞ்சிலும் குடிபெயர்ந்து உள்ளார். இதைத்தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை மற்றும் மன்றாடி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகர் சூரி அவர்களுக்கு இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது சூரிய அவர்களின் சொத்து மதிப்பு விவரம் குறித்து தகவல் பரவிவருகிறது. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு படத்திற்கு சம்பளம்  ரூ. 5 கோடி வாங்குகிறாராம். சினிமா மட்டுமில்லாமல் மதுரையில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் ஏராளமான ஓட்டல்கள் நடத்தி வருகிறார். பெரிய பிசினஸ்மேன் ஆகவலம் வருகிறார் சூரி. சுமார் ரூ.70 கோடிக்கும் மேல் இருக்குமாம் இவருடைய சொத்து மதிப்பு.