தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி முதல்வர் ஸ்டாலின் தன் கூட்டணி பலமாக இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார். அதே சமயம் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆறு ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத ஆறு கட்சிகளுக்கு ECI நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த விவகாரம் பெரும் சிக்கலை கொடுத்துள்ளது. இரண்டு எம்எல்ஏக்கள் இருந்தும் மனிதநேய மக்கள் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட காரணம், 2021 தேர்தலில் திமுக வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது தான். இதனால் 2026 தேர்தலில் மமக, கொமதேக தனிச் சின்னத்தில் போட்டியிட திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
