“பெண்ணுக்கும் பெண்ணுக்கும் சண்டை, அத ஊரே வேடிக்கை பாக்குது”… கணவரின் மகள் மீது அமர்ந்து கடுமையாக தாக்கிய சித்தி… வைரலாகும் வீடியோ…!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா பகுதியை சேர்ந்த புட்டசாமி என்பவருக்கு இரண்டு மனைவிகள். இவருடைய முதல் மனைவி சுகன்யா என்பவருக்கு ராகேஷ் என்ற மகனும் ரோஜா என்ற மகளும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறில் சுகன்யா தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து புட்ட சாமி பாக்கியா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளன. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு புட்ட சாமி உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆறு ஏக்கர் நிலத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி குடும்பத்தினருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவர்கள் முதல் மனைவியின் பிள்ளைகளான ராகேஷ் மற்றும் ரோஜாவுக்கு நான்கரை ஏக்கர் நிலத்தையும், பாக்கியாவுக்கு இரண்டு ஏக்கர் நிலத்தையும் பங்கிட்டு கொள்ளும்படி கூறியுள்ளனர். ஆனால் இதற்கு ராகேஷ் மற்றும் ரோஜா சம்மதிக்காததால் இதனை எதிர்த்து போலீசில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி மூன்று ஏக்கர் நிலத்தை பாக்யாவுக்கு வழங்கினர். இதனால் ரோஜா மற்றும் ராகேஷ் ஆகியோர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாக்யா தனக்கு ஒதுக்கிய மூன்று ஏக்கர் நிலத்தை உறவினருக்கு குத்தகைக்கு விட்ட நிலையில் அந்த உறவினர் ஒரு பகுதியில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

   

மற்றொரு பகுதியில் நெல் நடவு செய்ய அவர் உளவு செய்து போட்டிருந்த நிலையில் இது குறித்து அறிந்த ரோஜா தன்னுடைய கணவர் சூரி, மாமியார், பாட்டி ஆகியோர் பாக்யாவின் நிலத்திற்கு வந்து அங்கு பயிரிட்டு இருந்த கரும்புகளை பிடுங்கி எரிந்துள்ளனர். இதனை பாக்யா தட்டி கேட்டுள்ளார். இதனால் இரு குடும்பத்தினர் இடையேயும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அந்த சமயத்தில் சித்தியான பாக்யா தனது கணவரின் முதல் மனைவியின் மகளான ரோஜாவை நெல் நடவு செய்ய தயார் செய்து போட்டுள்ள சேற்று வயிற்றில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார். உடனே வந்த கிராம மக்கள் மற்றும் போலீசார் விரைந்து இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்திய நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அது தொடர்பான வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

   

 

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Sathish Kumar பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sathish_kandagalpura)