எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் ஜனநாயகம் திரைப்படத்தில் விஜய் நடித்துள்ளார். அரசியலில் தனது பயணத்தை ஆரம்பித்த விஜய்க்கு ஜனநாயகம் கடைசி திரைப்படம் ஆகும். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பிரியாமணி, மமீதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது வந்த தகவலின் படி ஜனநாயகம் திரைப்படத்தில் எம்ஜிஆரை காண்பிக்க உள்ளார்களாம். அதாவது பகவந்த் கேசரி திரைப்படத்தில் ஹீரோ இன்ட்ரோ காட்சியில் ஜெயிலுக்குள் பாலகிருஷ்ணா இருப்பார். அப்போது சுவற்றில் உள்ள சிங்கத்தின் புகைப்படத்தை காண்பித்து பாலகிருஷ்ணாவை போக்கஸ் செய்வது போல இன்ட்ரோ காட்சி இருக்கும்.
அதே போல ஜனநாயகன் திரைப்படத்தில் சிங்கத்திற்கு பதிலாக ஜெயில் சிறையில் எம்ஜிஆரின் ஓவியம் இருக்குமாம். இதனால் எம்ஜிஆரின் புகைப்படத்தில் இருந்து விஜயை காட்டுவது போல இன்ட்ரோ காட்சி இருக்கும் என கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் ஜனநாயகன் திரைப்படத்தில் அனிருத் ஒரு பாடலில் ஆடி பாடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
