நடிகை ஸ்ரீதேவி தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவருக்கு சொந்தமாக சென்னை ஈ.சி.ஆரில் சொத்து உள்ளது. இந்த சொத்துக்கு 3 பேர் உரிமை கேட்பதாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
போலியான வாரிசு சான்றிதழை பெற்று சொத்துக்கு உரிமை கோரும் 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தி 4 வாரத்தில் தாம்பரம் தாசில்தார் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
