“கேப்டன் ஆத்மா சந்தோசப்படும்” அன்று எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அழகு பார்த்த மனுஷன்… இன்று அவர் பிறந்தநாளில் அன்னதானம் கொடுத்த மகன்… வைரலாகும் வீடியோ…!!

By Soundarya on ஆவணி 25, 2025

Spread the love

அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி இரண்டிலும் விஜயகாந்த் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். படத்தில் இருப்பது போலவே நிஜத்திலும் ஏழை மக்களுக்கு நிறையவே உதவிச் செய்துள்ளார். விஜயகாந்த் அவர்களை மக்கள் கேப்டன் என்று அன்போடு அழைத்து வந்தனர். இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள்.என்னதான் பூமியில் இருந்து மறைந்தாலும் , மக்களின் மனதிலே குடியிருக்கிறார் இன்று வரை. இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று  10,000-க்கும் மேற்பட்டோருக்கு சென்னை கேப்டன் ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  அன்னதானத்தை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார்.  இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.