மும்பையில் தனது ஆட்டோவில் ஏறிய இளைஞரை, ஆட்டோ ஓட்டுனர் தாக்கும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில், ஆட்டோ ஓட்டுனருக்கும் அதில் பயணித்த ஒரு இளைஞருக்கும், கட்டணம் தொடர்பான தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஆட்டோ ஓட்டுனர், இளைஞரின் காலரை பிடித்து முகத்தில் அரைக்கிறார். அதிர்ச்சியடைந்து இளைஞர், ஆட்டோ ஓட்டுனரின் காலில் விழுந்து மன்றாடுவதையும், விரக்தியில் மண்டியிடுவதையும் காணலாம். இருந்தாலும் ரிக்ஷா ஓட்டுநர் தொடர்ந்து அவரை அறைந்து திட்டுகிறார்.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், “நேரில் பார்த்தவர்கள் கூட எந்த நடவடிக்கை எடுக்கவில்லை? ரிக்ஷாவில் உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் கூட அசையாமல் இருந்தனர்” என பல இணையவாசிகள் கோபத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு, “தயவு செய்து சரியான இடத்தை பகிரவும்” என்று காவல்துறை ட்வீட் செய்துள்ளது. அந்த நபர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது இன்னும் தெரியவரவில்லை.
सदरच्या शाळकरी मुलाचे पैसे हरवल्यामुळे रिक्षा प्रवासाचे पैसे न दिल्यामुळे रिक्षा चालक थेरड्याने विद्यार्थी पैसे नाहीत माफ करा म्हणत असताना देखील मारहाण केल्याचे दिसते
आमची महाराष्ट्र पोलिसांना विनंती आहे
याला असा धडा शिकवा की या वयात ही याला याचा बाप आणि याचे आजोबा आठवले… pic.twitter.com/bm5PpWs5pj— दत्ता चौधरी (@DattaChoud73764) August 24, 2025
