ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டதற்கு EPS தான் காரணம்… திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன் காட்டம்..!!

By Soundarya on ஆவணி 25, 2025

Spread the love

துறையூரில் இபிஎஸ் பரப்புரை கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிமுகவினாரால் தாக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக ஒரு பரப்புரையின் போது எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் வைத்து திமுகவினர் இடையூறு செய்வதாகவும், ஆம்புலன்ஸ் ஓட்டுனரை நோயாளி ஆக்கிவிடுவோம் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய  திமுக மருத்துவரணி செயலாளர் எழிலன், “எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பின்றி பேசியதன் விளைவாக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சராக இருந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது காழ்ப்புணர்ச்சியை காட்டுவது எந்த வகையில் நியாயம்? ஆம்புலன்ஸில் சிகிச்சை அளிக்க வந்த 7 மாத கர்ப்பிணி ஊழியரை தாக்கியுள்ளார்கள் அதிமுகவினர் என்று விமர்சித்துள்ளார்.