உங்க செயினை கழட்டி வச்சு பரிகாரம் செஞ்சா கஷ்டமெல்லாம் தீரும்… ஆசைவார்த்தை கூறி ஆட்டையை போட்ட கோவில் பூசாரி..!!

By Divyamayakannan on ஆவணி 25, 2025

Spread the love

சென்னை, அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஷகீலா, இவர் அம்பத்தூரில் உள்ள எம்.கே.பி நகரில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு வழக்கமாக செல்பவர். வழக்கமாக கோவிலுக்கு செல்வதனால் பூசாரி லோகேஷிடம் சகஜமாக பேசி வந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட லோகேஷ் ஷகிலாவிடம் உங்கள் வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாக கலசம் வைத்து பரிகாரப்  பூஜை செய்தால் நீங்கள் நினைக்கும் அனைத்தும் விரைவில் நடக்கும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஒரு நாள் லோகேஷ் ஷகீலாவின் வீட்டிற்கு பரிகாரப்  பூஜைக்காக சென்றுள்ளார். அங்கு கலசத்தில் ஷகிலாவின் இரண்டு பவுன் சங்கிலியைக் கழட்டி போடச் சொல்லி உள்ளார். பூஜை முடிந்தவுடன் பூசாரி ஷகிலாவிடம் நான் சொல்லும் வரை நீங்கள் கலசத்தை எடுக்காதீர்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். சுமார் ஒரு மாத காலம் ஆகியும் பூசாரி ஏதும் சொல்லாததால் சந்தேகப்பட்டு ஷகீலா கலசத்தை எடுத்த பார்த்தபோது நகை இல்லாததை கண்டு பேரதிர்ச்சி அடைந்தார். உடனே  அவர் பூசாரி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பூசாரி லோகேசை கைது செய்துள்ளனர்.