ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சாகர் துடு (22), யூடியூபர். இவர் நேற்று தனது நண்பர்களுடன், துடுமா அருவிக்கு சென்று, ட்ரோன் கேமரா மூலம் அருவியின் அழகை வீடியோ எடுத்தார். திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியின் நடுவே சாகர் சிக்கிக்கொண்டார்.
கரையில் இருந்த நண்பர்கள், கயிறு மூலம் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போது, திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாகரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. இந்த முழு சம்பவத்தையும், அவரது நண்பர்கள் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் தீவிரமாக சாகரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
A young life, wasted casually in the guise of receiving ‘social media validation’
Videos captured from Odisha, where a man stuck amidst the heavy water flow at the #DudumaWaterfalls
22-year-old #youtuber died after he was swept away in the heavy flood waters pic.twitter.com/WiVPqebPsb
— Simran (@SimranBabbar_05) August 24, 2025
