மேக்ஸ் பட இயக்குனர் விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் கிச்சா சுதீப் தனது 47 வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு கே47 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகை நிஷ்விகா நாயுடு இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்போது ரோஷினி பிரகாஷ் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இவர் தமிழில் அருண் விஜய்க்கு ஜோடியாக வணங்கான் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சுதீப்புடன் இணைந்து வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததால் ரோஷினி பிரகாஷ் உற்சாகத்தில் உள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, இது போன்ற ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். இது போன்ற படங்களை என் சினிமா கேரியரில் மைல் கல்லாக உணர்கிறேன். சுதீப் போன்ற ஒரு பான் இந்திய நட்சத்திரத்துடன் பணிபுரிவது உற்சாகமாக உள்ளது என கூறியுள்ளார்.
