ராமதாஸ் – அன்புமணி இடையே பூசாரி வேலை பார்க்கும் கருப்பு ஆடு… புதிய பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!

By Nanthini on ஆவணி 24, 2025

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பூசாரி வேலை பார்ப்பதில் முக்கியமானவர் வழக்கறிஞர் கே. பாலு என எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் என சொல்லிக்கொண்டு அன்புமணியை தவறாக வழி நடத்துவதாகவும் கூறினார். பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களுக்கு நிறுவனர் அழைக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் விதி என்றும் அதை மறைத்து கே. பாலு போன்றவர்கள் வசதிக்கேற்ப பேசுவதாகவும், அதில் துளியும் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.