இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பொது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது மோசாரியாளர்கள் தினமும் புதுப்புது உத்திகளை பயன்படுத்தி வரும் நிலையில் மகாராஷ்டிராவின் ஹிங்கோலியில், அரசு ஊழியர் ஒருவருக்கு whatsapp-ல் திருமண பத்திரிக்கையுடன் APK பைல் ஒன்றும் வந்துள்ளது. அதை அவர் கிளிக் செய்த அடுத்த நொடி அவரின் மொபைல் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கிலிருந்து சுமார் 1.90 லட்சம் திருடப்பட்டது. போலீஸ் இதை விசாரித்து வரும் நிலையில் மக்கள் வாட்ஸ் அப்பில் இது போன்ற மெசேஜ் எதுவும் வந்தால் நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
