OMG: 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பிரபல துணை நடிகை… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 23, 2025

Spread the love

சென்னை கோயம்பேடு 100அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்தது. தகவலின் பெயரில் போலீசார் விடுதிக்குச் சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போதுதான் தெரியவந்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை . சிறுமியை மீட்டு போலீசார். அச்சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்ற அஞ்சலி மற்றும் ஆந்திராவை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

சிறுமியின் தந்தை பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதால், தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அச்சிறுமி, தாயின் தோழியான அஞ்சலி உடன் கடந்த 3 ஆண்டுகளாக கே.கே.நகரில்  வசித்து வந்துள்ளார் . சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அஞ்சலி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார். போலீசார் துணை நடிகையான நாகம்மா உள்பட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.