“சினிமாவை பார்த்து தெரிஞ்சுகிட்டேன்….” 12 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி…! 10-ஆம் வகுப்பு மாணவனின் வெறிச்செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

By Devi Ramu on ஆவணி 23, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 12 வயதில் மகளும் இருந்தனர். சம்பவம் நடந்த அன்று ரேணுகாவும், கிருஷ்ணாவும் வேலைக்கு சென்ற பிறகு 12 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் மதியம் உணவு எடுத்துச் செல்வதற்காக கிருஷ்ணா வீட்டிற்கு வந்த போது 12 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதார்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்தது தெரியவந்தது.

   

அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்திய போது சிறுமியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகள், திருட்டு சம்பவங்களை பார்த்து மாணவன் டைரியில் எழுதி வைத்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாணவன் வீட்டிற்குள் நுழைந்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார்.

   

அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது சிறுமி மாணவனை பிடித்து தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறுவதாக கூறினார். இதனால் கோபத்தில் மாணவன் சிறுமியை 20 இடங்களில் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.