சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் இங்கும் மழைநீர் தேங்கி வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணகி நகரில், செல்லும் வழியில் மழை நீரில் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. அதை தெரியாமல் வரலட்சுமி மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளார்கள். இவரின் குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் இவர்தான். இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
