ஜோதிடர் சொல்லியும் கேட்காத கேப்டன்… பிரேமலதா காதுக்கு சென்ற விஷயம்… எப்போதும் அதை மறக்காம வைத்திருப்பாராம்..!!

By Soundarya on ஆவணி 23, 2025

Spread the love

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீப காலமாகவே தான் எங்கு சென்றாலும் கையில் கருங்காலி கோல் ஒன்றை எடுத்துச் செல்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்கும் பொழுது நண்பர் பரிசாக கொடுத்தது. அதை வைத்திருந்தால் நல்லது நடக்கும் என்று சொன்னார்கள். அதனால் தான் வைத்திருக்கிறேன் என்றார். ஆனால் தேமுதிக வட்டாரங்களில் கூடுதலாக கருத்து சொல்கிறார்கள். அதாவது கருங்காலி கோல் கையில் வைத்திருந்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று சொல்லி ஜோதிடர்கள் சிலர் அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து சொல்லி வருகிறார்களாம். அந்த வகையில் தான் முதல்வர் ஸ்டாலினுக்கும் தகவல் போய் அவர் காலை வாக்கிங்க் செல்லும்போதும் மறக்காமல் கருங்காலி கோலை கையில் எடுத்து செல்கிறாராம்.

இதே போலவே ஏற்கனவே விஜயகாந்த்திடமும் சில ஜோதிடர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதை விஜயகாந்த் நம்பவில்லை. அதனால் அவர் அதை பயன்படுத்தவில்லை. தொடர் தோல்வி அரசியலில் அவருக்கு வரிசையாக சரிவு ஏற்பட்டதும் கருங்காலி கோல் வைத்திருந்தால் இந்த சரிவு ஏற்பட்டிருக்காது என்று ஜோதிடர்கள் சொன்னார்களாம். இது பிரேமலதாவின் காதுக்கு சென்றதையடுத்து அவர் இதை பயன்படுத்த தொடங்கி உள்ளார். கருங்காலி கோல் பயன்படுத்தினால் விஜயகாந்த்திற்கு ஏற்பட்ட தோல்வி போல அரசியல் ரீதியில் தனக்கு பின்னடைவு ஏற்படாது என்று பிரேமலதா நம்புகிறாராம்.