தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த FUTURE READY என்ற புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பொது அறிவு சார்ந்த பாடங்கள் தொடர்பாக மாதந்தோறும் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், தேர்வு நடத்தி மாணவர்களுடைய கல்வித் திறனை ஆசிரியர்கள் அறிய வேண்டும். இது மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாதாந்திர ” Future – ready ‘ பயிற்சி மாணவர்களுக்கான வினாக்கள் – வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வினாக்கள் வழங்குதல் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
