அதிர்ச்சி..! பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை… அடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுக்க முடிவு… வெளியான பகீர் பின்னணி…!!!

By Divyamayakannan on ஆவணி 22, 2025

Spread the love

கடலூர், குழந்தை பிறந்து 26 நாட்களில் மரணமடைந்துள்ளது. காரணத்தை கண்டுபிடிக்க குழந்தையின் உடலை தோண்டி பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பண்ருட்டியை சேர்ந்த பெண் ஒருவர், கணவர் மற்றும் குடும்பத்தினரின் சட்டவிரோத காவலில் உள்ள ஒரு வயது மகனை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் என்ற நீதிபதிகளிடம் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காவல்துறை சார்பில் மனுதாக்கல் செய்த பெண்ணுக்கு கடந்த ஜூன் 7ஆம் தேதி இரண்டாவது குழந்தை அரசு மருத்துவமனையில் பிறந்ததாகவும் உடல் நல கோளாறால் ஜூலை 4ம் தேதி குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அக்குழந்தையை பிரேத பரிசோதனை செய்யாமல் அன்று மாலையே குழந்தையின் உடலை கெடிலம் ஆற்றங்கரையில் அடக்கம் செய்து விட்டதாகவும் குழந்தை பசியால் இறந்ததாக இறந்திருக்கலாம் என்றும் பிரேத பரிசோதனை செய்தால் அதன் மூலம் உண்மை வெளிவந்துவிடும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

   

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பெண் எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவே இல்லை என்று கூறுகிறார். ஆனால் காவல் துறையினரோ பெண்ணிற்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து கடிதம் பெற்று வந்துள்ளனர். கடிதத்தை நீதிபதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனால் நீதிபதிகள் குழந்தையின் மரணத்தை சந்தேகித்து வழக்கு பதிவுச் செய்து குழந்தையின் உடலை தோண்டி பிரேதப் பரிசோதனை செய்யுமாறு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். பிரேத பரிசோதனைக்கு பின்பு குழந்தையின் உடலை கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும் மற்றும் இதற்கு பெற்றோர்கள் அனுமதி வேண்டும் எனவும் உத்தரவிட்டு நீதிபதி பிரேத பரிசோதனை ஆகஸ்ட் 28ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் அன்றே விசாரணையை தள்ளி வைக்கிறேன் என்று கூறினார்.