“மச்சான், அவன் செத்துட்டான் போல” பள்ளி மாணவன் கொலை… காட்டிக்கொடுத்த இன்ஸ்டாகிராம் சாட்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

By Divyamayakannan on ஆவணி 22, 2025

Spread the love

குஜராத் மாநிலத்தின் உள்ள அகமதாபாத்தில் பள்ளி மாணவன் ஒருவன் ஜூனியர் மாணவனை கத்தியால் குத்தியதால் ஜூனியர் மாணவன் உயிரிழந்த பரிதாபம். கொலைக்கு பின்னால் இருக்கும் பல உண்மைகள், இன்ஸ்டாகிராம் சாட் மூலம் வெளியாகியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள செவன்த் -டே அட்வென்டிஸ்ட் ஹையர் செகண்டரி பள்ளியில் படிக்கும் மாணவன் நயன் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அதே பள்ளியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனுடைய நண்பர்களுடன் சேர்ந்து நயனை வழிமறைத்து வாக்குவாதம் செய்துள்ளனர்.

அந்த வாக்குவாதம் தகராறில் முடிய எட்டாம் வகுப்பு மாணவன் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து நயனின் பயிற்சி குத்திவிட்டு தப்பி ஓடி விட்டான். நயன் ரத்த காயங்களுடன் பள்ளிக்குள் ஓடி உதவி கேட்டுள்ளார். பின் அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுபவத்தில் உள்ளனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். போலீசார் கொலைக்கு காரணத்தை விசாரித்து வந்தனர், அப்போதுதான் தெரியவந்தது திடுக்கிடும் தகவல்கள் . குற்றவாளியான மாணவன் அவனுடைய நண்பர்களுடன் உரையாடிய சாட் கிடைத்துள்ளது.

   

அந்த உரையாடலில் நண்பர் ஒருவன் மச்சான் இன்னைக்கு ஏதாவது செஞ்சியா என்று கேட்டுள்ளான். அதற்கு குற்றவாளி ஆம் என்று பதில் அனுப்பி உள்ளான். அதில், நண்பன்: மச்சான் நீ தான கத்தியால குத்தின குற்றவாளி: உனக்கு யாரு சொன்னது, நண்பன்; ஒரு நிமிஷம் கால் பண்ணு உன்கிட்ட ஒன்னு கேட்கணும், குற்றவாளி; எங்க அண்ணன் பக்கத்துல இருக்கான் அதனால பேச முடியாத உனக்கு எதும் தெரியாது, நண்பன் ; இதெல்லாம் சாட்டில் பேசக்கூடாது தான் இந்த விஷயத்தை கேள்வி பட்ட உடனே எனக்கு நீதான் ஞாபகத்துக்கு வந்த, அவன் செத்துட்டான் போல டா, குற்றவாளி; செத்துருவான் நெனச்சி செய்யல..

   

இது போன்ற உரையாடல் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து குற்றவாளியான சிறுவனை கைது செய்துள்ளனர். ஊடகங்களில் வரும் வன்முறை விளையாட்டுகளை விளையாடி சிறியவர்கள் இது போன்ற குற்றங்களின் ஈடுபடுவது கல்வியை மிகவும் பாதிக்கிறது என்று காவல்துறையினர் மற்றும் கல்வியாளர்கள் கூறியுள்ளனர். மாணவன் நயனின் மரண செய்தி கேட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு ஊழியர்களை தாக்கி மற்றும் பள்ளிச் சொத்துகளை உடைத்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.