தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடபுடலாக நடந்தது. இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு கட்சி மாநாடும் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது இல்லை. தற்போது மாநாடு தொடங்கியுள்ளது. விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாநாட்டு திடலில் 40 அடி கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றினார் தலைவர் விஜய். தற்போது பேசி வரும் விஜய், தவெக கையில் எடுத்துள்ள அரசியல், உண்மையான அரசியல், உணர்வுப்பூர்வமான அரசியல், நல்ல அரசியல், நல்லது மட்டுமே செய்யும் அரசியல். நமக்கு எதிராக வரும் அத்தனை கூக்குரல்களையும் சின்னதா ஒரு சிரிப்போட கடந்துவிடுவோம்; இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். சிங்கம் எப்பவும் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது. அப்படியே வரும்போதும் உயிரோடு இருக்கும் தன்னைவிட பெரிய மிருகத்தை தான் வேட்டையாடும். அப்பவும் எவ்வளவு பசி இருந்தாலும் உயிர் இல்லாத கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது. சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியா தனித் தன்மையோட இருக்கவும் தெரியும். சிங்கம் தனியா வந்து அத்தன பேருக்கும் தண்ணி காட்டும் என்று பேசியுள்ளார்.
