கலை நிகழ்ச்சியுடன் தவெக மதுரை மாநாடு தொடங்கியது. விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மொழிப்போர் தியாகிகளுக்கு மாநாட்டில் மரியாதையும் செலுத்தப்பட்டது. பிறகு மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதியின் பெயரில் உறுதிமொழியேற்பும் நடைபெற்றது. இதனையடுத்து தலைவர் விஜய் தொடங்கியது கட்சி அல்ல புரட்சியை தொடங்கினார். கோடிக்கணக்கான மக்கள் படை இவர் பக்கம் உள்ளனர். இதற்கு பெயர் தான் சத்தம் இல்லாமல் சாதனை செய்வது என்று பொதுச்செயலாளர் ஆனந்த் தொடக்க உரையை தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றி வரும் தளபதி விஜய், நான் அரசியலுக்கு வர மாட்டேன் என பலர் ஜோசியம் சொன்னாங்க. கட்சி தொடங்கியதும் கட்சிதானே தொடங்கி இருக்காரு என்று சொன்னாங்க. பிறகு மாநாடு எல்லாம் எப்படி நடத்த முடியும் என்று சொன்னாங்க. கூட்டத்தை பார்த்து கூட்டம் தானே வந்திருக்கு ஓட்டு எப்படி வரும் என்று சொன்னாங்க. ஷூட்டிங்கிலிருந்து நேரடியாக வந்து ஆட்சியைப் பிடிப்பாரா என்று சொன்னாங்க. இன்னைக்கி கெத்தா வந்து நிக்கிறோம். மக்களோட ஓட்டு எல்லாம் நம்மளை எதிர்க்கிறவங்களுக்கு வேட்டா மாறனும் இன்று விஜய் பேசி வருகிறார்.
