மகன் பிறந்த 2 மாதத்தில் மாயமான 28 வயது தந்தை… நண்பர்கள் தேடிய போது காத்திருந்த அதிர்ச்சி…!

By Meena on ஆவணி 21, 2025

Spread the love

வேல்ஸில் நாட்டை சேர்ந்தவர் பிரண்டன் பார்ஃபிட்(28) என்பவர். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து மாயமானார் என கூறப்படுகிறது . இந்த நிலையில் அவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சமயத்தில் அவரது சகோதரர் டிரிஸ்டன் மற்றும் அவர்களது மற்ற உடன்பிறப்புகள், தனது சமூக ஊடகங்களில் தனது பிறந்த மகனுக்காக அவர் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று எழுதியுள்ளார்கள். மேலும் அவரது சகோதரர் டிரிஸ்டன் கூறியபோது, நான் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு பிரண்டனுடன் பேசினேன் என்று கூறினார்.

அப்போதிலிருந்தே நண்பர்களும் Ebbw Vale,ட்ரெடேகர், மற்றும் பிரைன்மாவர் போன்ற பகுதிகளில் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பார்ஃபிட்டை தேடும் போது Ebbw Vale யில் பகுதியிலிருந்து ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த சடலம் முறையான அடையாளம் கிடைக்கவில்லை என்றும் இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் Gwent போலீசார் தெரிவித்துள்ளார்.