லக்னோ, உத்திர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் மகாவீர் அஹ்ரா கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார் (28) இவருக்கு மனைவி தேவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு உணவிற்கு பருப்பு வகை உணவை தேவி சமைத்துள்ளார். பணியை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்த சஞ்சய் மனைவியிடம் சப்பாத்தி செய்துத் தருமாறு கேட்டுள்ளார். தேவி முடியாது என்று கூறியுள்ளார்.
அதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தேவி சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து கணவரை சரமாரியாக குத்தியுள்ளார். வலியில் சஞ்சய் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை எடுத்து இருக்கிறார் சஞ்சய். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
