திருமணமான பெண்ணோடு கள்ளக்காதல்… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… மனைவியின் வீட்டிற்கு வந்த அழைப்பு… அதிர்ச்சியில் உறைந்த பெண்ணின் பெற்றோர்..!!

By Srimathi on ஆவணி 20, 2025

Spread the love

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், சிவானந்தா படிகார் (35). உப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஜெயஸ்ரீ (30) என்பவருக்கும், கடந்த மே மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இருவரும் நந்தகோகுல் படாவனே பகுதியில் தனி குடுத்தனம் நடத்தி வந்தனர்.

சிவானந்தாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். கணவரின் கள்ளத்தொடர்பு விவகாரம் ஜெயஸ்ரீக்கு தெரியவர, கணவரை கண்டித்துள்ளார். ஆனால் சிவானந்த கேட்காமல், தனது கள்ளக்காதலை தொடர்ந்தார். இதனால் அடிக்கடி கணவன் – மனைவிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, தகராறு உச்சத்தை எட்டிய நிலையில், அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வைத்தனர். சிறிது நேரத்தில் சிவானந்தா, ஜெயஸ்ரீன் பெற்றோரை தொடர்பு கொண்டு, ஜெயஸ்ரீ தூக்கு போட்ட தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

   

பதட்டம் அடைந்த ஜெயஸ்ரீன் பெற்றோர், உடனே விரைந்து வந்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தூக்கில் பிணமாக தூங்கிய ஜெயஸ்ரீயை மீட்டனர். ஜெயஸ்ரீயின் பெற்றோர், சிவானந்தாவுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததால், அதனை தட்டி கேட்ட ஜெயஸ்ரீயை, அடித்து கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்க விட்டதாக புகார் கூறினர்.

   

மேலும் போலீசார், ஜெயஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஜெயஸ்ரீ, தற்கொலை தான் செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. தற்பொழுது, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சிவானந்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.