இந்த மனசு தான் சார் கடவுள்… அரசு பள்ளிக்காக ராகவா லாரன்ஸ், KPY பாலா செய்த நெகிழ வைக்கும் உதவி.. வைரல் வீடியோ..!

By Meena on ஆவணி 20, 2025

Spread the love

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்தான் kpy பாலா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றார் . இவர் இலவசமாக ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்.இப்போது ஹீரோவாக காந்தி கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிக்கப்போகிறது . இந்நிலையில் பாலா  ராகவா லாரன்ஸ்டன் சேர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார் . அதன்படி தற்போது அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்துள்ள இரும்பேடு கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் மாணவர்களின் முயற்சியால் மாற்றம் சேவை அறக்கட்டளை நிறுவனர் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் சமூக சேவர்களும் சின்னத்திரை நடிகருமான பாலா இருவரின் ஏற்பாட்டில் சுமார்  ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான கழிப்பறை கட்டப்பட்டது. இந்த திறப்பு விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா இருவரும் கலந்து கொண்டு கழிப்பறையை திறந்து வைத்தனர். அப்போது நடிகர் ராகவா லாரன்ஸ் மாணவர்கள் மத்தியில் பேசிய போது தாய் தந்தைகளை மதிக்க வேண்டும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார்.ராகவா லாரன்ஸ் மற்றும்  kpy பாலாவின் இந்த சேவை பலருடைய பாராட்டுகளை பெற்றுவருகிறது.