அடக்கொடுமையே..! ரீல்ஸ் எடுக்க பைக்கில் அதிவேகமாக சென்ற 17 வயது சிறுவன்… பரிதாபமாக துடிதுடித்து பலி..!!

By Meena on ஆவணி 19, 2025

Spread the love

இன்றைய இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில்‌ ஃபாலோக்களையும் ,லைக்குகளையும் அள்ளும் வகையில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் ஒன்று சாகச வீடியோவும் கூட. இந்த சாகச வீடியோ சட்டத்தை மீறும் வகையில் இருந்தாலும் சிலர் போலீசிடம் மாட்டுவது உண்டு. அது மட்டுமல்ல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அந்த வகையில் ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் வேகமாக சென்ற சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரத்தில் 17 வயது சிறுவன் கேடிஎம் பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பொழுது மற்றொரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு  அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி  மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக  அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.