பாலிவுட் நடிகர் அமிர் கானின் ‘3 இடியட்ஸ்’ என்ற படத்தில் பேராசிரியராக நடித்த பிரபல நடிகர் அச்யுத் போட்டார் (91). இவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது. 40 வருஷ கால திரைத்துறை வாழ்க்கையில் ரங்கீலா, தில்வாலே, லகேராஹோ முன்னாபாய், பரினீதா, வஸ்தவ், தபாங் 2 உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
