திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும், கேட்டரிங் கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும், மாணவனின் நண்பன் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் சிறுமையை அடையின்றி செல்போனில் நிர்வாண வீடியோவை எடுத்து வைத்துள்ளான். பிறகு தொடர்ந்து காதலித்து வந்தவர்கள், சிறுமியின் வீட்டிற்கு காதல் விஷயம் தெரியவர, மாணவனிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார், அச்சிறுமி.
இந்நிலையில் மாணவன் சிறுமியை நேரில் சந்தித்து நீ பேசவில்லை என்றால், “உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன். அது மட்டுமின்றி உன்னையும், உன் தந்தையையும் கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிறுமி. சிறுமியின் புகாரின் பெயரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
