மக்களே ரெடியா?… இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது தீபாவளி இரயில் டிக்கெட் முன்பதிவு… தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

By Nanthini on ஆவணி 18, 2025

Spread the love

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் சொந்த ஊர் செல்ல எதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

அக்டோபர் 17ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் இன்றும், அக்டோபர் 18ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 19 நாளையும் முன்பதிவு செய்யலாம். அதனைப் போலவே அக்டோபர் 19ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 20ஆம் தேதியும், அக்டோபர் 20ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை ஆகஸ்ட் 21ஆம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.