இனி பிரசவ வலியால் அவதிப்பட வேண்டாம்… குழந்தையை பெற்று கொடுக்கும் ரோபோ… ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி..!

By Srimathi on ஆவணி 18, 2025

Spread the love

மருத்துவ உலகில், பல்வேறு தொழில்நுட்பம் பெருகி உள்ள நிலையில், குழந்தையின்மை இன்னும் பலருக்கு பெரிய குறைபாடாக உள்ளது. இதனை சரி செய்ய, சீனாவில் இயங்கி வரும் Kaiwa Technology புதிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.

இதில் விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிஃபெங் தலைமையில், கருத்தரித்தல் முதல் குழந்தை பிறப்பு வரை அனைத்து செயல்களையும் செய்யும். மனித வடிவிலான கர்ப்ப கால ரோபோவை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பெண்ணின் கருப்பையில் உள்ள அமினாட்டிக் திரவத்தை, செயற்கை கருப்பையில் நிரப்பி, ரோபோவின் வயிற்றில் வைக்கப்படும். வழக்கமாக நஞ்சுக்கொடி குழந்தையை வளர்ப்பது போல், இந்த சேர்க்கை கருப்பையிலும் குழாய் வழியாக ஊட்டச்சத்து வழங்கப்படும். இந்த ரோபோவின் விலை 1 லட்சம் யுவான் (இந்திய மதிப்பில் 12.17 லட்சம்).

   

இது குறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானி, செயற்கை தொழில்நுட்பம் ஏற்கனவே வளர்ந்து விட்டது. தற்போது அதை ரோபோவின் வயிற்றில் வைத்து பொருத்த வேண்டும். இதன்மூலம் கரு, ரோபோவின் உள்ளே வளர அனுமதிக்கிறது, என்று கூறினார். இதன்மூலம் உருவாகும் குழந்தைகள், பல சிக்கல்களை எதிர்கொள்ளும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி ரோபோ மூலம் குழந்தை பெறுவது சாத்தியமானால், மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும். மேலும் இயற்கை முறையில் குழந்தை பெற விரும்பாத பெண்களுக்கு, இது ஒரு மாற்றாக அமையும்.