தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் மன்றம் சார்ந்த போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் “ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்”என்ற மூன்று நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், மரங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஒரு நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. மதிப்பெண் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
