பிறந்தநாள் வாழ்த்து சொல்ல போன் செய்தபோது இரங்கல் செய்தி… உடனே கண் கலங்கிய ஸ்டாலின்..!!

By Soundarya on ஆவணி 17, 2025

Spread the love

இன்று விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் காலையிலிருந்தே பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இன்று துக்க நாளாக அமைந்துள்ளது. அதாவது கவலைக்கிடமான நிலையில் இருந்த அவரின் சின்னம்மா செல்லம்மாள் (78) இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பிறந்தநாள் வாழ்த்து கூற போன் செய்தபோது, சின்னம்மா மறைந்துவிட்டார் என்ற செய்தியை வேதனையுடன் விசிக தலைவர் திருமா சொன்னதும், ‘கண்கள் கலங்கினேன்’. சின்னம்மா மீதான அவரது பாசப்பிணைப்பையும், அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும், அவரது உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் நினைத்து துயரம் அடைந்தேன் என்று  உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.