என்னடா, பார்க்க ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கீங்க… இப்படி ஒரு வேலைத்தனம் பண்ணீங்களா… மதுரை பசங்களின் அட்ராசிட்டி..!

By Divyamayakannan on ஆவணி 17, 2025

Spread the love

தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் ஆயுதங்களோடு சுற்றி திரிந்த மூவரை போலீசார் விதைத்து பிடித்து கைது செய்துள்ளனர். கோவை சூலூர் அருகே செட்டிபாளையத்தில் பிரபாகரன் கனகராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் இருந்து உள்ளனர் . அப்போது அதன் வழியாக மூன்று பேர் நடந்து செல்வதை பார்த்த போலீசார் விசாரித்தனர் அதற்கு மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார் மூவரையும் சோதனை செய்துள்ளார்கள் . அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தன அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு அந்த நபர்கள் அழைத்துச் சென்றுள்ளார்கள். விடுதியில் அனுமதித்தவர்களிடம் விசாரித்தபோது இவர்கள் சீனியரின் நண்பர்கள் அதனால் சீனியர்கள் தங்க வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து அந்த மூவரின் அறைக்கு காவலர்கள் சென்று சோதனை செய்துள்ளனர் அங்கு பயங்கரமான ஆயுதங்கள் இருந்துள்ளது பட்டாக்கத்தி மற்றும் வீச்சருவாள், ட்ரூ டிரைவர் பேனா கத்தி இது போன்ற பல பொருட்கள் கண்டுபிடித்தனர்.

   

இது மட்டும் இல்லாமல் மாணவர்களின் விடுதியில் 2 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். பிடிபட்ட மூன்று பேரில் ஒருவன் தப்பி ஓட முயன்றான் போலீசார் துரத்திப் பிடித்து கைதுச்செய்து விசாரணை நடத்தியதில் கருப்பசாமி (24), சந்தோஷ் குமார் (20), பிரவீன் (19) மூவரும் மதுரை சேர்ந்தவர்கள். கொலை முயற்சி, வீடு உடைத்து திருடுதல், வழிப்பறி ஆகிய 8 வழக்குகள் மூவரின் பெயரில் உள்ளது. மேலும் விசாரணை நடத்தியதில் அன்று நள்ளிரவு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவனை துரத்தி உள்ளார்கள். அவன் தப்பி ஓடி உள்ளான். அவனை தேடிக் கொண்டு இருந்த போது தான் போலீசாரிடம் சிக்கி உள்ளார்கள். மூவரையும் கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.