பாலிவுட் திரையுலகில் பிரபலமான ஒரு நடிகையாக இருப்பவர் தான் க்ரித்தி சனோன். இவர் தற்போது தனுஷ் உடன் இனைந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் . பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்ற இவர், மும்பையின் வசதி வாய்ப்பு பெற்ற ஒரு பிரபலமான இடமான, பாந்திரா பகுதியில் கடற்கரை அருகே சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.
இதன் மதிப்பானது சுமார் ரூ.78 கோடி என்று சொல்லப்படுகிறது. இவர் வாங்கியுள்ள இந்த புதிய வீடானது 7,302 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. கடற்கரை அருகே இருக்கும் இந்த வீட்டில் 6 கார் பார்க்கிங் வசதி உள்ளதாம். நேற்று பதிவு செய்யப்பட்ட இந்த சொத்துக்கு, வரி கட்டணம் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடியாம். ஆனால் இவர் ஒரு பெண் என்பதால் ஒரு சதவீதம் வரி தள்ளுபடி கிடைத்துள்ளது.
